நீங்கள் ஒரு ஓவிய ரசிகரா? நீங்கள் சரியான இடத்தில் தான் உள்ளீர்கள். உலகத்தின் மிகப் புகழ்பெற்ற மற்றும் பிரபலமான ஓவியங்கள் சில உள்ளன. இந்த ஓவியங்கள் காலம் பல கடந்து கலாச்சாரங்கள் பல கடந்து வந்துள்ளன. ஆனால் இவை இப்போதும் பார்க்க பார்க்க பரவசத்தை அளிக்கின்றன.உலகையே மாற்றியமைத்தது என்றுகூட சொல்லலாம்.
மோனாலிசா ஓவியம்

மோனாலிசா ஓவியம்
மோனா லிசா (The Mona Lisa) தனது மர்மமான புன்னகைக்கு பிரபலமான மோனா லிசா ஓவியம் – இத்தாலிய கலைஞர் லியோனார்டோ டா வின்சி என்ற மாபெரும் கலைஞரின் கைவண்ணம். மிகச் சில ஓவியங்களே இதைப்போல் திறனாய்வுக்கும், ஆராய்ச்சிகளுக்கும், தொன்மமாக்கத்துக்கும், நையாண்டிப் போலி உருவாக்கங்களுக்கும் உள்ளாகியிருக்கின்றன. பல ஆராய்ச்சியாளர்கள் இன்னும் மோனா லிசாவின் புன்னகையின் மர்மம் பற்றி ஆய்வுகள் செய்தாலும், சரியான விடையை டா வின்சியால் மட்டுமே தரமுடியும் என்பதே
பாரிசில் உள்ள லூவ்வரில், லியனார்டோ டா வின்சியின் “மோனாலிசா” ஓவியம் உலகிலேயே மிகவும் பிரபலமான ஓவியம் ஆகும்.
ஓவியத்தில் உள்ள பெண் யார் என்பது பற்றிய நிறைய ஊகங்கள் இருந்தன. இது பிரான்சோஸ்கோ டெல் ஜிகோண்டோ என்ற ஒரு ஃப்ளோரெண்டெய்ன் துணி வணிகர் மனைவி லிசா Gherardini ஒரு சித்திரம் என்று கருதப்படுகிறது.
இறுதி இராவுணவு

இறுதி இராவுணவு ஓவியம்
இது லியோனார்டோ டா வின்சி 15 ஆம் நூற்றாண்டில் வரைந்த சுவர் ஓவியம் ஆகும். இந்த ஓவியம் வரைந்த முறைகளினாலும் மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகளாலும் பல முறை புனரமைக்க பெற்றுள்ளது. இயேசு கிறிஸ்து சிலுவையில் உயிர்துறந்ததற்கு முந்திய இரவில் அவர்தம் சீடர்களோடு அருந்திய விருந்தை மையப்பொருளாக கொண்டுள்ள இந்த ஓவியம், இயேசு தனது சீடர்களில் ஒருவரே அவரை காட்டிக்கொடுப்பார் என்று பேசியபோது, ஒவ்வொரு சீடர்கள் கொடுத்துள்ள அதிர்வினை அழகாக சித்தரிக்கிறது
ஆதாமின் மறுபிறப்பு
உயிரற்ற உடம்பாக இருந்த ஆதாமின் சுண்டு விரலை இறைவன் தீண்ட ஆதாம் உயிர்பெற்று எழுந்தார் என்று சொல்லும் பைபிள் காட்சியை மைக்கேல் ஏஞ்சலோ தன் துரிகையால் படைத்தபோது ஆதாம் இரண்டாவது முறையாக உயிர் பெற்றான்!
இந்த அற்புதமான படைப்பு சிஸ்டைன் மாதா கோயிலின் வாட்டிகான் மேற்கூரையில் இருக்கின்றது. இதனைப்போலவே வேறு 340 ஓவியங்கள் உள்ளன. இவற்றை ஓவியங்கள் என்று கூறுவதை விட ஓவியங்களின் டிக்ஷனரி என்று சொல்வது தான் மிக பொருத்தமாக இருக்கும்.
உங்கள் கேவ்மேன் ஸ்டுடியோவில் அனைத்து வகை படைப்பாற்றல் மிக்க அழகழகான ஓவியங்களும் உள்ளன. விற்பனைக்கு மட்டுமல்லாமல் ஓவிய கலையை மற்றவர்க்கு கற்பிக்கும் வகையில் பயிற்சி அளித்தும் வருகிறது.