தஞ்சை ஓவியத்தின் வரலாறு: தமிழர்களின் ஒரு சில பாரம்பரியங்கள் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போனதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், அந்தக் கலையின் முக்கியத்துவம் இன்றைய தலைமுறையினருக்கு உணர்த்தப்படாதது ஆகும்.
தஞ்சை ஓவியத்தின் வரலாறு
உலகில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஓவியங்களில் ஒன்றானது “தஞ்சை ஓவியம்”. ஒரு நல்ல புத்தகத்துக்கு இணையாக ஒரு நல்ல ஓவியம் அனைவரது மனதைக் கவரும். நல்ல ஓவியங்களை பார்த்து ரசிப்பது என்பது ஒரு மகிழ்ச்சியான அனுபவம்.
தஞ்சாவூர் என்று கேட்டவுடன் நம் அனைவர்க்கும் நினைவுக்கு வருவது, தஞ்சை பெரிய கோவிலான பிரகதீஸ்வரர் கோவில், அடுத்தது தலையாட்டி பொம்மை, அதற்கடுத்தது தஞ்சை ஓவியம் தான். தஞ்சாவூர் ஓவியம் என்பது ஒரு தனித்தன்மை வாய்ந்த ஓவியக்கலை ஆகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், தெய்வங்களின் உருவங்களை வரைவதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு ஓவியமுறை.
சோழ மன்னர்கள் காலத்தில் உருவான தஞ்சை ஓவியம், அடுத்தடுத்த வந்த மன்னர்களுக்கு இடையே பெரிதாக ஆதரவு கிடைத்தது. மன்னர்கள் அனைவரும் அவர்களின் அரண்மனையில் தஞ்சை ஓவியங்களை வைத்து அலங்கரித்துள்ளனர்.
இன்னும் கலை மீது ஆர்வம் உள்ளவர்கள் அவர்களின் இல்லங்களில் தஞ்சை ஓவியங்களை வைத்து அழகுபடுத்தி உள்ளனர். முன்பெல்லாம் அரண்மனையில் மட்டுமே பெரிய அளவில் ஓவிய வல்லுநர்களால் செய்யப்பட்டன. ஆனால் இப்போதெல்லாம் சிறிய அளவில் கூட ஓவியங்களை செய்யப்படுகின்றன மற்றும் அனைவராலும் வாங்கப்படுகின்றன
தஞ்சை ஓவியத்திற்கு தனித்துவம் என்னவென்றால், உருவங்கள் உருவ அளவில் ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாமல் இருக்கும்.
அற்புதம் நிறைந்த தஞ்சை ஓவியங்களால் உங்கள் இல்லங்களை அலங்கரிக்க வேண்டுமா?
இதோ Caveman Studio-வில் எண்ணற்ற தஞ்சை ஓவியங்கள் உள்ளன.